Archives: ஜனவரி 2021

இறுதியில் விடுதலை

லெபனான் தேசத்தில் நடந்த கொடுமையான உள்நாட்டு போரில் ஐந்து வருடமாக பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டு பத்திரிக்கையாளர் ஜான் மெக்கார்த்தி தன்னை விடுதலை செய்ய நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கியமான நபரை சந்திப்பதற்கு 25 வருடங்கள் ஆயின. உலக ஐக்கிய நாடுகளின் தூதரான ஜியாண்டோமேனிக்கோ பிக்கோ-வை மெக்கார்த்தி சந்தித்த போது “என் விடுதலைக்கு நன்றி” என்று கூறினார். அவருடைய இந்த இதயபூர்வமான வார்த்தைகள் மிகவும் கனமான வார்த்தைகள் ஏனென்றால் மெக்கார்தியையும் மற்றவர்களையும் விடுவிக்க பிக்கோ தன்னுடைய சொந்த உயிரையே பணயம் வைத்தார.

விசுவாசிகள் ஆகிய நாம் அதிகமாக போராடி பெற்றுக் கொண்ட விடுதலையுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். நம்மையும் சேர்த்து நமக்காக ரோம சிலுவையில் இயேசு தம் ஜீவனை தந்தார். அவருடைய “ நாம் விடுதலை பெறும்படி கிறிஸ்து நம்மை விடுதலை ஆக்கினார்” (கலா 5:1) என்பதை நாம் அறிவோம்.

யோவான் சுவிசேஷமும் “ குமாரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை உண்டு” (யோ 8:36) என்று சுட்டிக்காட்டுகிறது.

எஃப் வழிகளில் விடுதலை? பாவமும், அதன் பிடியிலிருந்து மாத்திரம் நமக்கு விடுதலை இல்லை,குற்றங்கள், அவமானம், கவலை, சாத்தானின் பொய்கள், மூடநம்பிக்கைகள், தவறான போதனைகள் மற்றும் நித்திய மரணத்திலிருந்து நம்மை இயேசு நம்மை விடுவிக்கிறார்.அவைகள் எதற்கும் நாம் பிணைக் கைதிகள் அல்ல, நம் எதிரிகளிடம் அன்பு செலுத்தவும், அன்பில் நடக்க நடக்கவும், நம்பிகையோடு வாழ நமக்கு விடுதலை கிடைத்தது. பரிசுத்த ஆவியின் வழிநடுத்தலின் மூலம், நாம் மன்னிப்பு பெற்றதின் நிமித்தம் மற்றவர்களையும் நாம் மன்னிப்போம்.

இவை அனைத்திற்கும் தேவனுக்கு நன்றி செலுத்தி, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மெய்யான விடுதலையை அறிந்து கொள்வார்கள்.

உட்புற பிரச்சனைகள்

சில வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் மேல் மாடியில் மரம் கொத்தி பறவை ஒன்று கொத்திக் கொண்டே இருந்தது அதை நாம் அதிகமாக பொருட்படுத்தவில்லை அது எங்கள் வீட்டு வெளியே என்று எண்ணிக் கொண்டிருந்தோம் ஆனால் பல நாட்கள் இது நானும் என் மகனும் வீட்டு மேலே சென்று பார்க்கும் போது அந்தப் பறவை வீட்டினுள்ளே வைத்திருந்தது நினைத்ததைவிட மிகவும் மோசமாக இருந்தது இயேசு வந்தபோது அங்குள்ள மக்கள் அவர்களுடைய பிரச்சினைகளை அவர் போக்குவார் என்று எதிர்பார்த்தார்கள் அவர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தருவார் என்று எண்ணினார்கள் அனைத்து மக்களும் ஆரவாரத்துடன் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் உன்னதத்தில் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் மத்தேயு 21:9. இதற்காகத்தான் அந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேவன் நியமித்த ராஜா இறுதியில் வந்து விட்டார் தேவராஜா அனைத்தையும் புதிதாய் மாற்றுவார் ஆனால் வெளியே இருந்து தானே ஆரம்பிப்பார் கேள்விக்குறி ஆனால் இயேசுவோ தேவாலயத்தில் காற்றுப் அவர்களிடம் இருந்து ஆரம்பித்தார் அவர் வீட்டில் உட்புறத்திலிருந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்

நடக்கும் போது அவர் காரியங்களை சரிப்படுத்த வருகிறார் நீங்கும்படி சுத்திகரித்துக் நம் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் நிபந்தனையற்ற விடுதலை எதிர்பார்க்கிறார் அப்போது நான் கடந்து செல்வோம்

சிற்றலை விளைவு

ஆப்பிரிக்காவின் கானாவில் உள்ள சிறிய வேதாகம பள்ளி ஒன்று மிகவும் சாதாரணமான ஒரு சிறிய கட்டிடத்தில் மிகவும் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வந்தது. இருப்பினும் பாப் ஹேய்ஸ் அந்த மாணவர்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.அந்த மாணவர்கள் தயங்கினாலும் அவர்களுக்கு தலைமைத்துவ பணிகளும் பிரசங்கித்து கற்றுத்தரும் பணிகளையும் ஆர்களிடத்தில் ஒப்புவித்து ஊக்கப்படுத்தினார். பாப் இறந்து பல வருடங்களுக்கு பிறகு கானா முழுவதும் ஆங்காங்கே டஜன் கணக்குகளில் திருச்சபைகளும் பள்ளிக்கூடங்களும் இன்னும் கூடுதலாக இரண்டு வேதாகம நிறுவனங்களும் எழும்பின- அனைத்தும் அந்த சிறிய வேதாகம பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் துவங்கியவை.

அர்தசஷ்டா ராஜா (கி மு 465 -424) அரசாண்ட சமயத்தில் எழுத்தாளரான எஸ்ரா நாடுகடத்தப்பட்ட யூதர்களை மறுபடியும் எருசலேமுக்கு திரும்பி செல்ல ஒன்றிணைத்தார். தேவாலயத்தில் ஆசிரியர்களாக பணியாற்ற லேவியர்களை தேடினார் ஆனால் அங்கு ஒருவரும் காணப்படவில்லை (எஸ்ரா 8:15). உடனடியாக அங்கிருந்த தலைவர்களை வரவழைத்து தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை அழைத்துவரும்படி அவர்களை நியமித்து (வச 17) அவர்களை உபவாசத்திலும் ஜெபத்திலும் வழிநடத்தினார் (வச 21)

எஸ்ரா என்பதற்கு “உதவியாளன்” என்று அர்த்தம்- நல்ல தலைமைத்துவத்தில் இருக்கும் ஒரு குணநலன் அது. எஸ்ராவின் ஜெபத்துடன் கூடிய வழிநடத்துதலினால் அவரும் அவரோடு இருந்தவர்களும் எருசலேமை ஆவிக்குரிய விழிப்புணர்வுக்குள் வழி நடத்தினார்கள் (எஸ்ரா9-10). புத்தியுள்ள வழி நடத்துதலும் சிறிய அளவு உற்சாகமும் மட்டுமே அவர்களுக்கு தேவைப்பட்டது.

இப்படித்தான் தேவ சபையும் இயங்குகிறது. நம்மை உற்சாகப்படுத்தி கட்டியெழுப்ப உதவிய நல்ல வழிகாட்டிகளை போல நாமும் மற்றவர்களுக்கு செய்ய கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்நாள் முடிந்த பின்னும் அவை நிலைத்திருக்கும். பயபக்தியோடு தேவனுக்கு செய்யும் வேலை நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

அனைத்தையும் அர்ப்பணித்தல்

கலைத் துறையில் பிரசித்தி பெற்ற இரண்டு நபர்கள் தேவன் தங்களை அழைத்தார் என்று விசுவாசித்து தங்கள் தொழில்களை விட்டு விட்டு இயேசுவுக்கு சேவை செய்ய தங்களை அர்ப்பணித்தார்கள். சீனாவின் லிசு இன மக்களுக்கு சேவை செய்ய இங்கிலாந்தில் நடக்கும் கச்சேரிகளில் பியானோ வாசிப்பதை ஜேம்ஸ் ஓ ஃபிரசர்-ம் (1886-1938), சுவிசேஷகராக கலைத்துறையில் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கரான ஜட்சன் வான் டெவெண்டேர்-ம் துறந்தனர். பின்னர் மிகவும் பிரபலமான “இயேசுவுக்கே ஒப்புவித்தேன்” என்ற பாமாலையை எழுதினார்.

கலைத் துறையில் இருக்கும் அநேகரை தேவன் அழைத்துக் கொண்டிருக்கும் போது இந்த இரு மனிதர்களும் கீழ்ப்படிந்து ஒன்றை பின்பற்றும்படி மற்ற ஒன்றைக் கைவிட்டார்கள். ஒரு வேளை இயேசு, மாற்கு 10:17-25ல் இருக்கும் வாலிப ஐஸ்வரியவானுக்கு கொடுக்கும் அறிவுரையை பார்த்து இவர்களும் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். அந்த பரிமாற்றத்தை பார்த்த பேதுரு “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே!” என்று கூறினார் (வச 8). தேவனை பின்பற்றுகிறவர்களுக்கு நித்தியத்தில் இதைவிட “நூறத்தனையாக”வும் நித்திய ஜீவனும் உண்டு என்று இயேசு உறுதியளிக்கிறார். ஆனால் அவருடைய ஞானத்தின் படி “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச 31)

தேவன் நம்மை எங்கே வைத்திருந்தாலும் அனுதினமும் நம் வாழ்வை அவருக்கென்று அர்ப்பணிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நமது வேலை பார்க்கும் அலுவலகமாக இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்து வெகு தூரமாக இருந்தாலும் அவருடைய கனிவான அழைப்பிற்கு கீழ்ப்படிந்து நமக்கு தந்த தாலந்துகளையும் வளங்களையும் வைத்து அவரை பின்பற்றும் போது நாம் மற்றவர்களை நேசிக்கவும் அவர்களின் தேவைகளையும் அறியவும் தேவன் நமக்கு உதவுவார்.

ஆழமான இடங்கள்

19-ஆம் நூற்றாண்டில் நடந்த அரசியல் மற்றும் சமூக எழுச்சியின் காலத்தில் வாழ்ந்த கவிஞரும் நாவலாசிரியருமான விக்டர் ஹியூகோ (1802-1885) அவர் எழுதிய “லே மிசரபிள்ஸ்” (Les Miserables) என்ற புத்தகத்திற்கு பிரசித்தி பெற்றவர். ஒரு நூற்றாண்டு கழித்து இசை தழுவிய படமாக எடுக்கப்பட்டு மிகவும் பிரபலமான திரைப்படமாக கருதப்படுகின்றது. அனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. ஹியூகோ கூறின படி “சொற்களால் விவரிக்க முடியாததை இசை வெளிப்படுத்துகிறது மற்றும் அதை குறித்து சொல்லாமலும் இருக்க முடியாது”.
சங்கீதக்காரர்களும் அதை ஒப்புக்கொள்வார்கள். சங்கேத புத்தகத்தில் உள்ள அணைத்து பாடல்களும் ஜெபங்களும் நம் வாழ்வில் தவிர்க்க முடியடா வலிகளையும் கஷ்டங்களையும் பிரதிபலிக்கின்றது. அதன் வார்த்தைகள் நம்மால் அணுக முடியாத இடங்களுக்குள் சென்று நம்கி ஆறுதல் அளிக்கின்றது. எடுத்துக்காட்டாக சங்கீதம் 6:6ல் தாவீது “என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்” என்றுஅழுகிறார்.

வசனமாகிய சங்கீத பாடல்களில் அத்தகைய ஆழமான நேர்மையை கவர்ந்திருப்பது நம்மை நன்றாக ஊக்குவிப்பதாக இருக்கிறது. நமக்கு உதவும் படியும் ஆறுதல் அளிக்கும்படியும் அவர் ப்ரசன்னத்திற்குள்ளாக அழைக்கும் தேவனிடம் நம் பயன்களை கொண்டு வரும்படி அழைக்கிறது.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை இசை வெளிப்படுத்தக்கூடும். அந்த உணர்ச்சியை நாம் பாடலாகவோ ஜெபமாகவோ அல்லது அழுகையாகவோ வெளிப்படுத்தும் போது நம்மால் அடைய முடியாத ஆழமான இடங்களில் தேவன் தம் வார்த்தைகளால் நம் இருதயத்தில் சமாதானம் தருகிறார்.